top of page

இளமையையும் இறைபணியையும் இணைக்கும் GIO


அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால், GIO Chennai Metro நடத்தக்கூடிய JOIN GIO Campaign, மிகவும் மன மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. நான் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மகளிர் அணிச் செயலாளராக இருக்கிறேன். கடந்த நான்கு வருடங்களாக GIO மாநில Co-ordinator ஆக நான் பொறுப்பு வகித்து உள்ளேன். அந்தத் தருணங்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய தருணங்களாக இருந்தது.


GIO என்பது இளம் மாணவியர்களுடைய பங்களிப்பு. இந்த சமூகத்தில் மாணவிகளை, இளம் தலைமுறையினரை வழிநடத்தக்கூடிய விதம் மிகவும் அருமையாக இருக்கிறது.


இறைவன் இந்த இகாமத்துத் தீன் - மார்க்கத்தை நிலைநாட்டும் பணியை, இறைநம்பக்கையாளர்கள் அனைவர் மீதும் கடமையாக்கி இருக்கிறான். ஒவ்வொரு இறை நம்பிக்கை கொண்ட ஆணும் பெண்ணும் இந்த தீனை நிலைநாட்டக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது இறைவனுடைய கட்டளை. அதன் அடிப்படையில், இளம் தலைமுறையினராக இருக்கக்கூடிய இந்த GIO வில் பயணித்துக் கொண்டிருக்கக்கூடிய இளம் பெண்கள், அல்ஹம்துலில்லாஹ், அந்த இளம் வயதிலேயே தங்களுடைய திறமைகளையும், ஆற்றல்களையும் இறைவனுடைய பணிக்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தளம் தான் இந்த இஸ்லாமிய மாணவியர் அமைப்பு - GIO.


Author: A ஃபாத்திமா ஜலால், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

மாநில மகளிரணி செயலாளர், தமிழ்நாடு & புதுச்சேரி Date: 24 February 2026

 
 
 

Comments


Post: Blog2_Post
bottom of page